தமிழகம்

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து.! நேராக வந்து மோதிய கதிர் அறுக்கும் இயந்திரம்.! புதுப்பெண் உள்பட 2 பேர் பலி.!

Summary:

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்த

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள பொம்மாடிமலை சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனம் மீது ஆம்னி மோதியது. இதனால் நிலை குலைந்த பேருந்து சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதனால், பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அலறல் சத்தம் போட்டுள்ளனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சரண்யா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இறந்த சரண்யாவுக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement