திடீரென சாலையின் நடுவே வந்த நபர்.! சட்டென பேருந்தை திருப்பிய ஓட்டுநர்.! பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.!

திடீரென சாலையின் நடுவே வந்த நபர்.! சட்டென பேருந்தை திருப்பிய ஓட்டுநர்.! பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.!


bus-accident-in-cmpt

திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த பேருந்தை அசோக் குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் வந்துள்ளார். இதனால் பேருந்து அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திடீரென திருப்பியுள்ளார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரை தாண்டி மறுபக்கம் பாய்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் இரண்டு பேருந்தின் கண்ணாடிகளும் நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

accident

விபத்து குறித்து தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சேதமடைந்த அரசு பேருந்துகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அங்கு நடந்த விபத்தால் அங்கு போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது.