தமிழகம்

மறுநாள் தங்கை திருமணம்.! முதல்நாள் இரவு திடீரென உயிரிழந்த அண்ணன்!! வெளியான கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

Summary:

brother dead a day before sister marriage

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் தனபால். 29 வயது நிறைந்த இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு அக்கா ஒரு தங்கை உள்ளனர். இவர்களில் அக்கா இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் தங்கை மீனாவிற்கு முசிறி உடையான் பட்டியைச் சேர்ந்த அவரது உறவினரான குமரன் என்பவருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

 அதனை தொடர்ந்து நேற்றைக்கு முதல் நாள் பெண் அழைப்பிற்கான வேலைகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. மேலும் குமரனும் தங்கை திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர் வீட்டு பக்கமுள்ள வயல் பகுதியின் இருள் சூழ்ந்த பகுதிக்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவரது தந்தை அவரை தேடிச் சென்றுள்ளார். ஆனால் எங்கு தேடியும் தனபாலை காணவில்லை. சந்தேகமடைந்த அவர் அருகில் இருந்த கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துள்ளார்.

 தண்ணீர் இல்லாத அந்த கிணற்றிற்குள் தனபால் மயங்கிய நிலையில்  கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலையில் அடிபட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் மறுநாள் நடைபெறவிருந்த தங்கை மீனாவின் திருமணம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. 
 


Advertisement