திருமணம் முடிந்த 5 நாளில் அனைவரையும் கதறி துடிக்கவிட்ட புது பெண்! அதிர்ச்சி சம்பவம்.

திருமணம் முடிந்த 5 நாளில் அனைவரையும் கதறி துடிக்கவிட்ட புது பெண்! அதிர்ச்சி சம்பவம்.


Bride suicide after 5 days of marriage in theni district

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுபதி. 22 வயதாகும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற 19 வயது பெண்ணிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் சேதுபதி வீட்டின் மாடியிலும், சேதுபதியின் பெற்றோர் கீழ் தளத்திலும் வசித்துவந்துள்னனர். இந்நிலையில் சம்பவத்தன்று, நீண்ட நேரமாகியும் தனது மருமகள் கீழே வராததால் சந்தேகமடைந்த சேதுபதியின் தாய் வீட்டின் மாடி பகுதிக்கு சென்று சோதித்துள்ளார்.

suicide

காத்தாடி மாட்டுவற்காக அமைக்கப்பட்டிருந்த கொக்கியில் சிவசக்தி தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த சேதுபதியின் தாய் சத்தம் போட்டு கதறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிவசக்தியை மீட்டு மருத்துவமையில் சேர்த்துள்னனர்.

சிவசக்தியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசக்தி ஏன் தற்கொலை செய்துகொண்டார்? தற்கொலைக்கான காரணம் என்ன? இது தற்கொலையா? அல்லது கொலையா என விசாரித்துவருகின்றனர்.

திருமணம் முடிந்து 5 நாட்களில் புது பெண் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.