திருமணத்தின் போது ஒரே ஒரு வார்த்தையை தவறாக படித்த மணமகள்!! மொத்த அர்த்தமும் மாறிப்போச்சு..! வைரல் வீடியோ..



Bride read wrong word during marriage viral video

திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் சொன்ன ஒற்றை வார்த்தை அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்ததோடு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட வீடியோ காட்சியில், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் ஒன்று நடைபெறுகிறது. அதில் மணமகளிடம் திருமண வார்த்தைப்பாட்டைச் சொல்லி, அதனை திரும்ப வாசிக்க கூறுகிறார் பாதிரியார். மணமகளும் திருமண வார்த்தைப்பாட்டை வாசிக்கிறார்.

அந்த வகையில் ''இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் உங்களை நேசிக்கவும் மதிக்கவும்'' என கூறுவதற்கு பதிலாக, வாழ்நாளெல்லாம் உங்களை நேசிக்கவும் "மிதிக்கவும்" என படித்துவிட்டார்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு மதிக்கவும் என மீண்டும் படிக்கிறார். ஆனால் அதற்குள் அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். இதனை பார்த்த மணமகளும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே படிக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் வெளியிட, அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.