நடுரோட்டில் பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம்.. இளைஞர் போக்சோவில் கைது.!
மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே விளநகரை சேர்ந்தவர் இளைஞர் ஜெயபிரகாஷ் (25). இவர் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதனலயாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளியை விட்டு வீட்டுக்கு செல்லும்போது திடீரென பைக்கில் இருந்து ஜெயப்பிரகாஷ் வழிமறித்துள்ளார்.
அப்போதே மனைவியிடம் வாக்குவாதம் செய்து நான் உன்னை விடமாட்டேன் நீ என்னை காதலித்து ஆக வேண்டும் இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனைப் பார்த்து பயந்து ஓடிய மாணவியை இழுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டு துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வேகமாக வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ஜெயிப்பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகை சிறப்பும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.