தனியாக சென்ற பள்ளி மாணவியிடம் அத்துமீறி அநாகரீகமாக நடந்த இளைஞர் கைது!



Boy harassment to school girl in Chennai

சென்னை அருகே 11 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.

chennai

அந்த வகையில் சென்னை எம்.கே.பி நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி டியூஷன் சென்றுவிட்டு திரும்பி வரும்போது சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

chennai

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி வீடியோவை வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.