கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
11 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

விழுப்புரம் மாவட்டம் மினாமூரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் புதுச்சேரியில் ட்ராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி ஒதியன் சாலை பகுதியில் 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து ஜாகிர் உசேன் போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகிர் உசேனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.