காதலியுடன் தனிமையில் இருந்த படங்களை பரப்பிய பாய் பிரண்ட்: நல்லூர் போலீசாரின் வலையில் வீழ்ந்தார்!.

காதலியுடன் தனிமையில் இருந்த படங்களை பரப்பிய பாய் பிரண்ட்: நல்லூர் போலீசாரின் வலையில் வீழ்ந்தார்!.


boy-friend-was-arrested-who-spread-his-girl-friends-pho

இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய காதலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறாததால் ஆத்திரமடைந்த காதலன், அவர்கள் இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் இமான் ஹமீப். இவர் கரூரைச் சேர்ந்த 21 வயது  இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருப்பூரில் இரண்டு மாதங்கள் இருவரும் ஒன்றாகவும் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண்ணை மதம் மாறுமாறு இமான் ஹமீப் வற்புறுத்தி இருக்கிறார். தனது மதத்திற்கு  அப்பெண்ணை மாற வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனை ஏற்காத அந்த பெண் இமான் ஹமீப்பை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இமான் ஹபீப் அந்த பெண்ணுடன் தனிமையில்  ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ந்து போன அந்த இளம் பெண், கடந்த 04 ஆம்  தேதி அன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து வகழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், புகாரின் உண்மைதன்மையை அடிப்படையாக கொண்டு இமான் ஹமீப்பை கைது செய்துள்ளனர்.  

மேலும், அவர் மீது சாதிப் பெயரைச் சொல்லி திட்டியது, பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.