தமிழகம்

பாவிங்க இப்படி பன்னிட்டாங்களே!! கதறும் குடும்பம்..!! இளம் பெண்ணுடன் ஓடிய காதலனின் தந்தையை கொலை செய்த காதலி வீட்டார்!

Summary:

காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் காதலனின் தந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்ப

காதல் விவகாரத்தில் பெண் வீட்டார் காதலனின் தந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செங்கான்வளவு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான தங்கவேலு. இவரது மனைவி சின்னம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் பிரகாஷ் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்ற இளம் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் காதல் ஜோடி திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மகள் வீட்டை விட்டு ஓடியது தெரிந்ததும் சந்தியாவின் உறவினர்கள் பிரகாஷின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்களிடம் சந்தியா எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் எங்களுக்கு தெரியாது என பதில் கூறியுள்ளனர். அப்போது இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரகாஷின் தந்தை தங்கவேலுவை வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் தங்கவேலு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement