பார்க்கும்போதே மனசு பதறுது!! லாரிக்கு அடியில் சிக்கிய சிறுவன்.. அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி..

டிப்பர் லாரி மோதி சிறுவன் உயிர்பிழைத்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவ


Boy escaped from accident viral video

டிப்பர் லாரி மோதி சிறுவன் உயிர்பிழைத்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் சாலையில் வாகனங்கள் வருகிறதா என பார்த்துவிட்டு சாலையை கடக்க முயல்கிறான். அப்போது சிறுவன் வேகமாக ஓடி சாலை கடக்க முயன்றபோது மினி டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து சிறுவன் மீது மோதுகிறது.

இந்த விபத்தில் சிறுவன் மினி டிப்பர் லாரிக்கு உள்ளே செல்ல, இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் பதறியடித்து லாரியை நோக்கி ஓடுகின்றனர். ஆனால் சிறு காயங்களுடன் சிறுவன் லாரிக்கு அடியில் இருந்து உயிருடன் எழுந்து வெளியே வந்துள்ளான். சிறுவன் உயிருடன் இருப்பது பெரிய மகிழ்ச்சி என்றாலும், இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து சிறுவன் எப்படி தப்பித்தான் என்பது அங்கிருந்த அனைவர்க்கும் பெரிய ஆச்சரியம்தான்.

இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.