தமிழகம்

அது நடந்து ஆறு மாசம் ஆயிடுச்சு..! சிறுமியின் உடலில் திடீர் மாற்றம்..! என்னனு விசாரித்தபோது பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

Boy abused girl in hospital near Nellai

தனது தாயாருக்கு உதவியாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி ஒருவர் மருத்துவமனையில் இருந்த இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆறு மாதம் கர்பமாக உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரகக்கல் அடைப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருடன் அவரது 17 வயது மகளும் தாயாருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளியின் குடும்பத்தினர் சிலர் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளனர்.

13 வயது சிறுமி..! 26 வயது இளைஞர்..! 9 ...

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியுடன் நெருங்கிப்பழகி அவரை மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அவர் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். 

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அப்பெண்ணும் அவரது தாயாரும் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், ஆறு மாதங்களளுக்கு பிறகு அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் அவரது தாயார் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை மருத்துவமனையில் தங்கியிருந்த போது வாலிபர் ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நெல்லை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் 6 மாதங்களுக்கு முன்பு நெல்லையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அந்த நோயாளியின் விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement