தமிழகம்

பாடம் நடத்தும் ஆசிரியரா இப்படி?? சோதனை செய்த அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

பண மோசடியில் சிக்கிய அரசு பள்ளி தலைமையாசிரியர்!

சேலம் மாவட்டம் கருமந்துறை மலை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன். இவர் சமீபத்தில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பல தரப்பினர் இவர் மீீீது முதலைமைச்சர் தனிப்பிரிவுக்கு அடுத்தடுத்து புகார் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள  வெங்கடேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர். அரசு பள்ளி தலைமையாசிரியரான வெங்கடேசனின் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத்துறைையினர், வெங்கடேசனிடம் வருமானத்திற்க்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்து இருப்பது தெரிய வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கியதாக 56 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் தலைமையாசிரியர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement