தடையை மீறி வேல் யாத்திரை நடத்த இருந்த பாஜக.! போலீசாரின் அதிரடி நடவடிக்கை.!

தடையை மீறி வேல் யாத்திரை நடத்த இருந்த பாஜக.! போலீசாரின் அதிரடி நடவடிக்கை.!



bjp people arrested for vel yatra

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இன்று திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் யாத்திரையை முடிக்க பாஜக திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

ஆனால் திட்டமிட்டபடி யாத்திரையை துவக்க, தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் முடிவு செய்துள்ளார். இதனால், திருத்தணியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த 6 பாஜக நிர்வாகிகளை இரவோடு இரவாக கைது செய்தது காவல்துறை. விழுப்புரம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் ராஜ்குமார், பாஸ்கரய்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவின் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.