தமிழகம் சினிமா

உன் சொந்த மகள்னா சும்மா இருப்பியா.? டேய்.. அவன் என் கையில கிடைச்சான்..! கொந்தளித்த பிக்பாஸ் ஜுலி.!

Summary:

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜ

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜகோபாலன். இவர் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வந்து பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கும் நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குறித்த பள்ளியை நானோ என்னுடைய மகள் மதுவந்தியோ நடத்தவில்லை நாங்கள் ட்ரஸ்டி தான் என்று ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். பள்ளி விவகாரம் தொடர்பாக மதுவந்தி அளித்த விளக்கம் குறித்த வீடியோ ட்வீட்டை பார்த்த பாஜக நிர்வாகி நாராயணன் சுந்தரம் கூறுகையில், தயவு செய்து ராஜகோபாலன் மீதான நடவடிக்கையை நிறுத்தவும்.

தற்போதுள்ள டீனேஜ் பெண்கள் எல்லாம் குழந்தைகள் இல்லை. அவர்கள் நெட்ஃப்ளிக்ஸ் அடல்ட் படங்களை பார்க்கிறார்கள். அதனால் உண்மையை கண்டுபிடிக்கவும். ஆதாரம் இல்லாமல் ராஜா சார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றார்.  நாராயணனின் ட்வீட்டை பார்த்த தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத்தோ, இது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று கமெண்ட் போட்டுள்ளார்.

நாராயணன் சுந்தரம் டுவிட்டைப் பார்த்த பிக்பாஸ் ஜுலி, நீ எல்லாம் நிஜமாவே மனுஷ ஜென்மம் தானா.? உன் சொந்த பெண்ண பண்ணுனா சும்மா இருப்பியா? இதுல அந்த கேவலமான பிறவிக்கு சார் பட்டம் வேற.... டேய் அவன் என் கையில கிடைச்சாலே வெட்டி போட்டுருவேன்.. என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜுலி கூறியுள்ளார். 


Advertisement