தனக்கு தானே சமாதி... பங்காரு அடிகளார் இறுதிச் சடங்கு எப்போது.?



bangaru-adigalaar-built-a-mausoleum-for-him-updates-abo

கோவில் வழிபாட்டில் புரட்சி செய்த ஆதிபராசக்தி அம்மா பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82 ஆகும். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் ஆவார். மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய கல்வி அறக்கட்டளை இன்று பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேல்மருவத்தூர் கோவிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என கோவில் வழிபாட்டு முறைகளில் புரட்சி செய்தவர் இவர்.

tamilnaduகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இவரது பிறந்த நாள் விழாவிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் தாஸ் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

tamilnaduஇந்நிலையில் அவரது இறுதிச் சடங்குகள் நாளை மேல்மருவத்தூரில் நடைபெற இருக்கிறது. பங்காரு அடிகளார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனக்கான சமாதியை உருவாக்கி வைத்திருக்கிறார். அங்கு அவரது உடல் புதைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் அவரது சமாதி பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.