தமிழகம்

கர்ப்பிணி பெண்காவலருக்காக காவல்நிலையத்திலேயே இப்படியொரு ஏற்பாடா? நெகிழவைத்த ஆச்சர்ய சம்பவம்!!

Summary:

baby shwer function celebrated in police station

சென்னை அண்ணாசாலை அருகே காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷில்பா. அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் அவரை சந்தோஷப்படுத்தும் விதமாக, அவருக்கு காவல் நிலையத்தில் உள்ள போலீசார்கள் அனைவரும் இணைந்து காவல் நிலையத்திலேயே ஒரு குடும்பமாக மிகவும் கோலாகலமாக வளைகாப்பு நடத்தி அவருக்கு சீர்வரிசையும் கொடுத்துள்ளனர். மேலும் அந்த கர்ப்பிணி காவலரின் வளைகாப்புக்கான ஏற்பாடுகளை அண்ணாசாலை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் செய்து உதவினார்.

 

baby-shower-function-for-police-in-police-stationஅதனை தொடர்ந்து காவல்நிலையத்திலேயே வீடுகளில் நடத்தப்படுவது போன்றே குத்துவிளக்கு ஏற்றி, அனைவரும் ஒன்றாக இணைந்து  கர்ப்பிணி பெண்ணிற்கு நலங்கு வைத்து,  வளையல் அணிந்து விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சீர்வரிசைகளும் கொடுத்து சந்தோஷப்படுத்தியுள்ளனர் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த நெகிழ்ச்சி சம்பவத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement