தமிழகம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி.! ஊராட்சி மன்ற தலைவர் கைது.!

Summary:

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி.! திமுக நிர்வாகி கைது.!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜமாணிக்கம். மேலும், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகவும் இருந்துவந்தார். 38 வயது நிரம்பிய இவர் மீது ஏற்கனவே 4 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.  

இந்த நிலையில் ராஜமாணிக்கம் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சத்திற்கு மேல் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப வில்லை. இதனால் பணத்தை கொடுத்தவர்கள், கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி ராஜமாணிக்கத்திடம் பலமுறை கேட்டுள்ள நிலையில் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராஜமாணிக்கத்திடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement