அவினாசி பேருந்து விபத்து: அம்மாவ பாக்க வரேன்னு சொன்னியே..! ஏன்டா வரல நெஞ்சைப் பிழிந்த தாயின் கதறல்!Avinasi bus accident news

பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்த கேரளா அரசு பேருந்தும், சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றும் நேற்று அவினாசி அருகே நேருக்கு நேர் மோதி கொண்டதில் 20 பேர் பரிதமாக உயிர் இழந்தனர்.

இந்த விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூங்கியதே விற்பதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுனரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இறந்தவர்களின் நிலை குறித்து அவர்களுடன் பயணம் செய்த சக பயணிகள் கூறும் தகவல் கேட்போரை கண்கலங்க வைக்கும் விதமாக உள்ளது.

Avinshi bus accident

தூக்கத்தில் இருந்த பலர் விபத்து நடந்ததே தெரியாமல் உயிரிழந்ததாகவும், அவர்களிடம் இருந்து எவ்வித அழுகையோ கதறலோ பெரிதாக வரவில்லை என்றும் காயமடைந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதுஒருபுரம் இருக்க, உன்னி  நீ என் ஜீவனடா .. திரும்பி வந்துடறா!... அம்மாவை பாக்குறதுக்கு வரேன்னு சொன்னியே... ஏண்டா வரலை? என்று கதறியபடி வந்த தாயின் அலறல் அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் புரட்டி போட்டது என்றே கூறலாம்.