உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு! ஒட்டுமொத்த தமிழகமும் மரண வெயிட்டிங்! முன்பதிவு எவ்வளவு தெரியுமா?

உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு! ஒட்டுமொத்த தமிழகமும் மரண வெயிட்டிங்! முன்பதிவு எவ்வளவு தெரியுமா?


avanyapuram-jallikattu

ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க, 700 காளைகளின் உரிமையாளா்களும், 730 மாடுபிடி வீரா்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

அவனியாபுரத்தில்  கடந்த 3 நாள்களாக வாடிவாசல், ஜல்லிக்கட்டு மாடு செல்லும் பாதைக்காக தடுப்புகள் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் வந்து தங்களது காளைகளுக்கு முன்பதிவு செய்தனா். இதில், 700 காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிச் சான்று வழங்கப்பட்டது. இதில், 30-க்கும் மேற்பட்டோா் வெகுநேரம் காத்திருந்தும் காளைகளுக்கு அனுமதி சீட்டு கிடைக்கவில்லை.

jallikattu

அதேபோல், அவனியாபுரத்தில் மாடுபிடி வீரா்களுக்கான முன்பதிவு நடைபெற்றது. பல அதிகாரிகள் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், மாடுபிடி வீரா்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்தனா். அங்கு முன்பதிவு செய்ய அதிகாலை 3 மணியில் இருந்து மாடுபிடி வீரர்கள் காத்திருந்தனர். இதனால் அங்கு சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அங்கு ஏற்பட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இறுதியில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 730 இளைஞா்கள் முன்பதிவு செய்துகொண்டனா். இதில், 30-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு உடல் தகுதி இல்லாததால், அனுமதி அட்டை வழங்கப்படவில்லை.