அப்பா உன்கூடவே இருப்பேன்டா செல்லகுட்டி.! தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர்! சிக்கிய மனதை நொறுக்கும் உருக்கமான கடிதம்!

அப்பா உன்கூடவே இருப்பேன்டா செல்லகுட்டி.! தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர்! சிக்கிய மனதை நொறுக்கும் உருக்கமான கடிதம்!


auto-driver-suicide-for-money-issue

கும்பகோணத்தில் வசித்து வந்தவர் ரகுபதி. இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வந்துள்ளார். இவரது மனைவி அமுதா. இவருக்கு சந்தியா, சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் ரகுபதி நான்கு மாதமாக வேலைக்கு செல்லாமல், வருமானமின்றி பெருமளவில் தவித்து வந்துள்ளார். மேலும் இதனால் மனஉளைச்சல் அடைந்த ரகுபதி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், எனது மரணத்திற்கு நானே காரணம். கொரோனா ஊரடங்கால், என்னால் நான்கு மாதம் ஆட்டோ ஓட்ட முடியவில்லை. அதனால் மாத வட்டி,  வாரகுழு, மாத குழு, ஆட்டோவிற்கான கடன் ஆகியவற்றை கட்ட முடியவில்லை. எல்லாம் நெருக்கி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், நான் இந்த முடிவை எடுத்து விட்டேன்.

auto driver

காவல் ஆய்வாளர்களுக்கும்,  மாவட்ட ஆட்சியர்களுக்கும்,  இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
எனது மறைவிற்குப் பிறகு எனது மனைவியிடம் யாரும் பணம் கேட்டு தொல்லை கொடுக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் முடிந்தால் தமிழக அரசிடமிருந்து ஏதாவது உதவி பணம் பெற்று, என் மனைவியிடம் தந்து உதவுங்கள்.

அமுதா என்னை மன்னித்துவிடு. மகனை நல்லபடியாக பார்த்துக்கொள். என் செல்லகுட்டி சஞ்சய் அப்பா உன் கூடவே தான் இருப்பேன். எனது தங்கை ரேவதி, பாசமான மச்சான் மற்றும் உறவினர்கள் அனைவரும் என் குடும்பத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆட்டோ சங்கத்தை சேர்ந்தவர்களும் என்னை மன்னித்துவிடுங்கள். எனது ஆட்டோவை விற்று  கடனை அடைத்து விடுங்கள். சங்கம் மூலமாக கிடைக்கும் உதவித்தொகையை எனது மனைவியிடம் கொடுங்கள். என் மகனின் மருத்துவ செலவையும் பார்த்துக்கொள்ளுங்கள். நம் சங்கத்தினர் முன்நின்று என்னை அடக்கம் செய்யுங்கள். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.