சென்னையில் ஆட்டோ, டாக்ஸிகள் இன்றுமுதல் இயங்க அனுமதி! மகிழ்ச்சியில் ஓட்டுனர்கள்!

சென்னையில் ஆட்டோ, டாக்ஸிகள் இன்றுமுதல் இயங்க அனுமதி! மகிழ்ச்சியில் ஓட்டுனர்கள்!



Auto and taxi started in chennai

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 4ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கபட்டபோது  ஆட்டோக்கள் இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டும் ஆட்டோ இயங்க அனுமதி கொடுக்கவில்லை.

auto

இந்தநிலையில், தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கபட்ட நிலையில்,  சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் சலூன்கள், அழகு நிலையங்கள், ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை முழுவதும் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கால்டாக்சி உள்ளிட்ட வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர மூன்று பேர் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.