தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
கட்டுக்கட்டாக பணம்..! திறந்து கிடந்த கதவு..! ATM இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பி விட்டு ஊழியர் அதனை சரியாகப் பூட்டாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்திரையர்பாளையம் வழுதாவூர் சாலையில் அமைந்துள்ள கனரா வங்கியின் ATM இயந்திரத்தில் நேற்று இரவு 12 லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்டுள்ளது. பணத்தை வைத்த ஊழியர் இயந்திரத்தின் கதவை சரியாக பூட்டாமல் சென்றுள்ளார்.
இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் இன்று காலை ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அங்கு பணம் வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இயந்திரத்தை சோதித்ததில் உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் பத்திரமாக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர், அங்கிருந்த CCTV காட்சிகளை சோதனை செய்ததில், பணம் நிரப்பிய ஊழியர் பணப்பெட்டி இருக்கும் கதவை பூட்டியுள்ளார், ஆனால் கதவு சரியாக பூட்டாததால் சிறிது நேரத்தில் தானாகவே திறந்துள்ளது.
இதனை அடுத்து எலக்ட்ரானிக் லாக்கை மீண்டும் உறுதி செய்து விட்டு அதிகாரிகள் சென்றனர். மேலும், சரியான நேரத்தில் காவல் நிலையத்திற்கு போன் செய்து இதுகுறித்து தெரிவித்த வாடிக்கையாளருக்கு போலீசாரும், வங்கி அதிகாரிகளும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.