மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
அடேங்கப்பா! போலி சான்றிதழை கொடுத்து 24 ஆண்டுகள் ஆசிரியராக பணி.. கிடுக்குபுடி விசாரணை..!

தேனி மாவட்டம் பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய்பானு. இவர் கண்டமனூர் அருகே உள்ள ராஜேந்திரன் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் 12ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உண்மை அறியும் சோதனைக்காக ஆசிரியர் விஜய்பானுவின் மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வுதுறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் விஜய்பானுவின் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து விஜய் பானுவின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலி சான்றிதழ் மூலமாக 24 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.