டிரான்ஸ்பார்மர் மின்சாரம் தாக்கி யானை பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகக்காட்சி.!

டிரான்ஸ்பார்மர் மின்சாரம் தாக்கி யானை பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகக்காட்சி.!


Assam Burapahar Tea Estate Elephant Died Transformer Electric Attack

தேயிலைத்தோட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள புராபஹா பகுதியில் தேயிலைத்தோட்டம் உள்ளது. இந்த தேயிலைத்தோட்டம் கடிதாண்டி வனச்சரத்தின் கீழ் உள்ள பகுதி ஆகும். இதனால் இப்பகுதியில் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக இருக்கும். 

இந்நிலையில், நேற்று தேயிலைத்தோட்டடபகுதியில் யானை ஒன்று சுற்றித்திரிந்த நிலையில், அது டிரான்ஸ்பார்மர் அருகே சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனால் டிரான்ஸ்பார்மரில் இருந்து வெளியான மின்சாரம் தாக்கி யானை அங்கேயே உட்கார்ந்தவாறு உயிரிழந்துள்ளது. 

Assam

காலை நேரத்தில் யானை உயிரிழந்து இருப்பதை கண்ட தேயிலை தோட்டப்பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, மின் இணைப்பை துண்டித்து யானையின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தை கஜிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.