தமிழகம் விளையாட்டு

பொள்ளாச்சியில் போராட்டமா? விவரம் கேட்ட தமிழக கிரிக்கெட் வீரரை சரமாரியாக வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!

Summary:

ashwin ravichandran ask doubt about pollachi

பொள்ளாச்சியில்  20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் இரத்தம் கொடுத்து போனர். மேலும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் எனவும் குரல் எழுப்பி வந்தனர்.

 

 

அதனை தொடர்ந்து  பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக  திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் கலோரி மாணவர்கள் நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ashwin ravichandran க்கான பட முடிவு

இந்நிலையில் விஸ்வரூபம் எடுத்த இந்த விவகாரம் குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “ பொள்ளாச்சியில் போராட்டமா?அங்கு என்ன நடக்கிறது என யாரவது சொல்ல முடியுமா?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு சிலர் ஆதரவு அளித்து பதிலளித்திருந்தாலும் பலர் லண்டன்ல இருக்கிற எனக்கே தெரிஞ்சிருக்கு. இந்தியால அதுவும் தமிழ் நாட்டில இருக்கிற உங்களுக்கு எப்பிடி தெரியாம போச்சு? இல்ல தெரிஞ்சு கிட்டே சும்மா அடிச்சு விடுறிங்களா? அவமானம், என பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 


Advertisement