ஆசையாக கட்டிய வீட்டை கூட கடைசியாக பார்க்காமல் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி..! 2 நாட்களுக்கு முன்தான் நடந்த கிரஹப்பிரவேசம்..!

ஆசையாக கட்டிய வீட்டை கூட கடைசியாக பார்க்காமல் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி..! 2 நாட்களுக்கு முன்தான் நடந்த கிரஹப்பிரவேசம்..!


army-man-pazhani-house-warming-function

தான் ஆசையாக கட்டிய புது வீட்டையும், கிரஹப்பிரவேசதையும் கூட பார்க்காமல் தமிழக வீரர் பழனி வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதேபோல், இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடி தாக்குதலில் 40 சீனா ராணுவ வீரர்களும் மரணமடைந்தார். இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரும் ஒருவர்.

Ladaak attack

ராமநாதபுர மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பழனி (40). பலவருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றிவந்த பழனி லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சீன ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

உயிரிழந்த பழனிக்கு வானதி தேவி என்ற மனைவியும் பிரசன்னா என்கின்ற 10 வயது ஆண் குழந்தையும், திவ்யா என்கின்ற 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பழனி தனது சொந்த ஊரில் புதிதாக வீடு ஒன்று கட்டிவந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கிரகப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. அந்த வீட்டை கூட பழனியால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று மனைவியும் குழந்தைகளும் கதறிய சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.