கல்லூரி மாணவி காரில் கடத்தல்.. பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய்மாமன் பகீர் செயல்.!

கல்லூரி மாணவி காரில் கடத்தல்.. பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய்மாமன் பகீர் செயல்.!


ariyalur-men-kidnapped-a-girl

பெண் தராததால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை, காரில் கடத்தி சென்ற தாய்மாமன், பொதுமக்களால் தர்மஅடி கொடுக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்.

அரியலூர் அருகாமையில் உள்ள குறிஞ்சிநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா (வயது 30). இவர் ரயில் நிலையத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார் 

இந்த நிலையில், இவர் தனது அக்கா மகளை ஒருதலையாக காதலித்து வந்தபோது, திருமணம் செய்ய அவரது அக்காவிடம் என்று கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆவேசமடைந்த முத்தையா மாணவி கல்லூரிக்கு சென்றபோது வழி மறித்து வலுக்கட்டாயமாக காரில் கடத்தி உள்ளார்.

Ariyalur

இதனால் பயந்து போன மாணவி வெங்கடகிருஷ்ணபுரம் பகுதியில் கத்திக் கூச்சலிட்ட நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சந்தேகமடைந்து ஒன்றுகூடி காரை மடக்கி பிடித்துள்ளனர்.

பின் அவருக்கு தர்ம அடி கொடுத்ததில், "தான் பெண் கேட்டு தராததால் ஆத்திரத்தில், மாணவியை கடத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார்". இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மையை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்துள்ளனர்.