அரசியல் தமிழகம் சினிமா

தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரகுமான் வாழ்த்து.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

Summary:

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும்

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தநிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஏ.ஆர் ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.ஆர் ரகுமான் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார்.


Advertisement