கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 என தருவது தான் தமிழக அரசியல்.! பாஜக அண்ணாமலை பேச்சு.!

கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 என தருவது தான் தமிழக அரசியல்.! பாஜக அண்ணாமலை பேச்சு.!


annamalai talk about admk

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்துள்ளார். இந்தநிலையில், முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக – பாஜக இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 ஆக தருவது தான் தமிழக அரசியல். ரூ.2000 நம்பி 5 ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது. 

annamalai
பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் ” என்று கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருவது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.