மாணவர்கள் இதை பின்பற்றினால் தான் அறிவியல் கணிதங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.!

மாணவர்கள் இதை பின்பற்றினால் தான் அறிவியல் கணிதங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.!



anna-univercity---thunaivanther---surappa

மாணவர்கள் தத்தம் தாய்மொழியில் கல்வி பயின்றால் தான் அறிவியல் கணிதக் கோட்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

18வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பல்கலை. துணைவேந்தர் சூரப்பா  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ‘இன்றைய இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் பயில்வதை தயக்கம் காட்டுகின்றனர். தாய் மொழியில் படித்தால் தான் அறிவியல் மற்றும் கணிதங்களை புரிந்து கொள்ள முடியும். ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழியில் தான் அறிவியலை படிக்கிறார்கள். அப்போது தான் அறிவியல் கோட்பாடுகள் குழந்தைகளுக்குப் புரியும். 

தற்போது 18வது உலகத்தமிழ் இணைய மாநாடு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 20 முதல் 22ம் தேதி வரையில் இம்மாநாடு நடைபெறுகிறது. தானியங்கி கருவிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு என்பதே உலகத்தமிழ் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.’ இவ்வாறு துணைவேந்தர் சூரப்பா பேசினார்.