தமிழகம்

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்.. 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிந்து கோர விபத்து.. 7 பேர் பலி.!

Summary:

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்.. 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிந்து கோர விபத்து.. 7 பேர் பலி.!

50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டு இருந்தவர்களில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டம், தர்மாவரத்தில் இருந்து சித்தூர் நோக்கி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 52 பேர் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். 

இந்த பேருந்து, அங்குள்ள பக்ராபெட் பகுதியில் செல்கையில், எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இய்லாந்துள்ளது. இந்த விபத்தில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த நிலையில், 7 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

மேலும், 45 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த காரணத்தால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை வரை பயணிகள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது. 


Advertisement