தமிழகம் இந்தியா

9 மனைவிகள்..!! பல காதலிகள்.. ஆசை தீர்ந்தபிறகு அவர்களை என்ன செய்தான் தெரியுமா!! பதறவைக்கும் ஆந்திரா சம்பவம்..

Summary:

இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களி திருமணம் செய்து பாலியல் தொழில் தள்ளிய இளைஞரை

இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களி திருமணம் செய்து பாலியல் தொழில் தள்ளிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் பல பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களுடன் சில நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்திவிட்டு பின்னர் அந்த பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளான்.

9 பெண்களை திருமணம் செய்தது மட்டுமில்லாது, பல்வேறு பெண்களை திருமணம் செய்யாமலையே அவர்களை தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொண்டு பாலியல் தொழில் தள்ளியுள்ளான். திருமணம் முடிந்த பெண்கள், கணவனை பிரிந்த பெண்கள் சிலரும் இவரது சதியில் சிக்கி சீரழிந்துள்ளனர்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கும்பலுடன் உள்ள தொடர்பால் எப்போதும் கையில் துப்பாக்கி, கத்தி என சினிமா தாதா போல வலம் வந்துள்ள அருண்குமார், தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் இருப்பதற்காக அவர்களை அடித்து துன்புறுத்துவது, அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளான்.

இந்நிலையில் அவனால் திருமணம் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதநிலையில், தற்போது அந்த பெண்கள் இதுகுறித்து ஆந்திரா மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் காவல்துறையினர் அருண்குமார் என்ற அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவனிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார், அவனால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களையும் மீட்டுள்ளனர்.

மேலும் அருண்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


Advertisement