வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய கணவர்.! மகனுடன் சேர்ந்து சடலமாக வந்த சம்பவம்.! கதறித் துடித்த மனைவி.!

வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய கணவர்.! மகனுடன் சேர்ந்து சடலமாக வந்த சம்பவம்.! கதறித் துடித்த மனைவி.!


Andhra man died at road accident while returning from foreign

வெளிநாட்டில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய நபர் தனது மகன் மற்றும் தாய்யுடன் கார் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், புல்லாம்பேட்டை சென்னகாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையா (42).

குவைத் நாட்டில் கடந்த 4 வருடங்களாக வேலைபார்த்துவந்த பாப்பையா நேற்று குவைத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்த பாப்பையா தனது தாய் சுப்பம்மா (60) மற்றும் மகன் ஹரிச்சரண் (8) உடன் காரில் ஊருக்கு சென்றுள்ளார்.

இவர்கள் சென்ற கார் சின்ன ஓரம் பாடு என்னும் கிராமம் அருகே சென்றபோது எதிர்நோக்கி வந்த டேங்கர் லாரி மீது கார் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறுவன் ஹரிச்சரண் உட்பட பாப்பையா மற்றும் அவரது தாய் என மூவரும் சம்பவ இடத்திலையே உயிர் இழந்தனர்.

வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய கணவர், மகனுடன் சேர்ந்து சடலமாக வந்ததை பார்த்த பாப்பையாவின் மனைவி கதறி அழுதது, பார்ப்போர் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.