தமிழகம்

தாயை பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த மகன்! வந்த இடத்தில் நடந்த பகீர் சம்பவம்!

Summary:

America return son suicide in chennai anna nagar

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ஆர்.எஸ்.ராய். இவருடைய மகன் எட்வர்ட் பிரதீப்குமார் (49). மென்பொருள் பொறியாளரான இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது தாய் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பதால் அவரை பார்த்துக்கொள்ள எட்வர்ட் சென்னைக்கு வந்துள்ளார்.

தனது மனைவி மற்றும் மகள்கள் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக எட்வர்ட் தனது தாயின் அருகில் இருந்து அவரை கவனித்துவந்துள்ளார். இந்நிலையில் எட்வர்ட்ன் தந்தை தனது மகனிடம் உன் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவில் தனியாக இருப்பார்கள் இங்கு நான் பார்த்துக்கொள்கிறேன் நீ அமெரிக்கா கிளம்பு என கூறியுள்ளார்.

தனக்கு அமேரிக்கா செல்ல இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் கிடைத்ததும் கிளம்பிவிடுவதாக எட்வர்ட் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் எட்வர்ட் தீயில் கருகி பிணமாக கிடந்துள்ளார்.

அவரது சடலத்தின் அருகில் பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்துள்ளது. இந்நிலையில் எட்வர்ட் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement