# Big Breaking 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

# Big Breaking 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!



all-pass-in-9th-10th-and-11th

அதிகரித்துவரும் கொரோனா பரவலால், தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு துவங்கியும், ஏழு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தபின்னர் ஜனவரி, 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி முதல், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

school

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே, 3ல் துவங்கும் என, அரசு தேர்வுத்துறை 3 ஆம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் 9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.