அரசியல் தமிழகம்

அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினரே போராட்டம்.! புதுக்கோட்டையில் பரபரப்பு.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய காட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இதனால் சில இடங்களில் முக்கிய கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிப்பு தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக வடகாடு கிராமத்தை சேர்ந்த தா்ம.தங்கவேல் அறிவிக்கப்பட்டார்.

தா்ம.தங்கவேல் காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவராக இருந்து அண்மையில் அதிமுகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஆலங்குடி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி ஆலங்குடி அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement