மக்களே உஷார்... வாட்டிவதைக்கவிருக்கும் அக்கினி வெயில்... எப்போது ஆரம்பம் தெரியுமா.?

மக்களே உஷார்... வாட்டிவதைக்கவிருக்கும் அக்கினி வெயில்... எப்போது ஆரம்பம் தெரியுமா.?


Akkini summer start at day after tomorrow

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் கோடை வெயில் மனிதனை வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாநிலங்களில் 100 டிகிரிக்கு மேல் சென்று வெயில் மனிதனை வெந்து தணிய வைத்து வருகிறது.

இதனால் மக்கள் மலை, குளிர்பிரதேசங்கள் மற்றும் அருவிகளை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் முதல் அக்கினி வெயில் ஆரம்பமாக உள்ளது.அக்கினி வெயில் காலங்களில் மற்ற நாட்களை விட வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் என்பதால் நண்பகல் வேலையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Akkini

மேலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீர், நுங்கு, பழச்சாறு போன்றவற்றை பருகுவதன் மூலம் உடல்நலம் பெறும் என உடல் நல ஆலோசகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.