அரசியல் தமிழகம் சினிமா

நடிகர் அஜித் அரசியலுக்கு வருகிறாரா?? தல அஜித்தின் அதிரடி அறிவிப்பால் அதிர்ந்துபோன சினிமா வட்டாரமும், அரசியல் வட்டாரமும்!!

Summary:

ajith announcement


அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. தல அஜித் நடித்த விஸ்வாசம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது என அணைத்து மக்களும் கூறுகின்றார்.

ரசிகர்களால் தல அஜித் என போற்றப்படும் நடிகர் அஜித்குமார் அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Thala Ajith To Take A Break Before His Next Movie

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த, திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம், சிலவருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது- என்று நான் சிந்தித்ததின் வீரியம் முடிவு அது. 

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்த படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது, தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயப்பாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும். 


இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோஅல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் சார்ந்த ஆர்வமும் இல்லை . ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக் கட்ட அரசியல் தொடர்ப்பு, நான் என் ரசிகர்களைகுறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்ப்பந்திக்கவும் மாட்டேன் என கூறியுள்ளார்.


Advertisement