புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அதிமுக மகளிரணி குறித்து ஆபாச பேச்சு.. அதிமுக எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் சரண், உடனடி ஜாமின்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி நிர்வாகி, திருவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில், அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் உட்பட 4 பேர் தன்னைப்பற்றி ஆபாசமாக பேசுகிறார்கள். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், எம்.எல்.ஏ மான்ராஜ் உட்பட 4 பேரை தேடி வந்தனர். இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்.எல்.ஏ பிப். 22 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற அரசியல் தலைவர்கள் வழக்கு விசாரணை அமர்வில் ஜாமின் பெற்றார்.
மேலும், அவர் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்ட நிலையில், நேற்று திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ், திருவில்லிபுத்தூர் நீதிபதி சிவராஜ் முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமினில் வெளியே வந்தார்.