எனக்கு வாய்ப்பில்லை என்றால் இதுதான் உங்க நிலைமை.. பாஜகவுக்கு தாவிய அதிமுக பிரமுகர்.!
எனக்கு வாய்ப்பில்லை என்றால் இதுதான் உங்க நிலைமை.. பாஜகவுக்கு தாவிய அதிமுக பிரமுகர்.!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராத காரணத்தால், அதிமுக நிர்வாகி பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், பாஜக மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்னதாகவே போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி, பலரும் மாற்று கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நகராட்சி தேர்தலுக்கு தமிழகம் ஆயத்தமாகி வரும் நிலையில், மதுரையில் 61 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட லட்சுமி என்பவர், கடந்த தேர்தலில் வெற்றி அடைந்தார். அவருக்கு தற்போது அதிமுக தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த லட்சுமி, தனக்கு அதிமுக தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறி, அக்கட்சியில் இருந்து விலகி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.