சசிகலாவை வரவேற்ற அதிமுக நிர்வாகி.! ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.!aiadmk-executive-fired

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, சசிகலாவின் விடுதலையை வரவேற்று பலரும் போஸ்டர் அடித்து ஒட்டினர்.

இந்தநிலையில், சசிகலா விடுதலையானதை வரவேற்கும் விதமாக திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் புலியூர் அண்ணாதுரை ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டினார்.

Admk

அந்த போஸ்டரில், 33 கால ஆண்டுகள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அதிமுக பொதுசெயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்ற வசனத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரே 'பொதுச் செயலாளர் சின்னம்மா' என போஸ்டர் ஒட்டியது அதிமுக கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி போஸ்டர் ஒட்டியதாக ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆலத்தூர் தெற்கு ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.