மீண்டும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிப்பு! பூஜை செய்த பாஜகவினர்!

again thiruvalluvar statue discouraged.


again-thiruvalluvar-statue-discouraged

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 6-ஆம் தேதி திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் சாணம் வீசி அவமதித்தனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினை தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது.

      thiruvalluvar statue

தேனி மாவட்டம்  பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது ஒருவர் குப்பைகளை வீசி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிலையை பாஜகவினர் நீர் ஊற்றி சுத்தம் செய்து, பால் ஊற்றி பூஜை செய்தனர்.  இதனையடுத்து பாஜகவினர் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை தேடி வருகின்றனர்.