தமிழகம்

திருமணம் முடிந்த கையோடு இளம் ஜோடிகள் எடுத்த விபரீத முடிவு...நெஞ்சை உருக்கும் துயர சம்பவம்.!

Summary:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிமேய்க்கான்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்(18). இவர் 12 ஆம் வகுப்ப

திண்டுக்கல் மாவட்டம் கன்னிமேய்க்கான்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்(18). இவர் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கூலிவேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் உறவினர் வீட்டு பெண்ணான சிவரஞ்சனி(19) என்பவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். காரணம் அஜித்தை விட சிவரஞ்சனி வயது அதிகம் என்பது தான். சிவரஞ்சனியின் பெற்றோர் சிவரஞ்சனிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி கரூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எப்படியும் வீட்டிற்கு சென்றதும் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் விஷம் குடித்து விட்டு போன் செய்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிவரஞ்சனி உயிருக்கு போராடி வரும் நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Advertisement