நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் கல்லூரிகள்.! இதை கண்டிப்பா மறந்துடாதீங்க!

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் கல்லூரிகள்.! இதை கண்டிப்பா மறந்துடாதீங்க!


after long days college opened

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடிக்கிடந்த கல்லூரிகள் இன்று (07.12.2020) முதல் திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புகள் திறக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

college

இந்நிலையில் கல்லூரி திறப்பு குறித்து பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளைத் திறக்கக் கூடாது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

கல்லூரி வளாகத்தில், நிர்வாக அலுவலகம், ஆய்வகம் என அனைத்து இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி. மாணவர்கள் முடிந்தவரைக் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.