நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுபானக்கடைகள்.! குடிபோதையில் தங்கை என்று பாராமல் அண்ணா செய்த கொடூரம்..!After a long time task mark opened, one of the anna murder him own sister

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவருக்கு மூன்று மகள்களும், கணேஷ் பாபு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டியனின் மூன்றாவது மகள் அம்சவள்ளி ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அம்சவள்ளி தனது சொந்த ஊரில் உள்ள முருகேச பாண்டி என்ற இளைஞரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு அம்சவள்ளியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் அம்சவள்ளியின் அண்ணா மட்டும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.

Taskmark

தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக மதுபானக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் கணேஷ் பாபு குடிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் மதுவிற்பனை தொடங்கியதை அடுத்து கணேஷ் பாபு நன்கு குடித்து விட்டு வந்து தங்கை அம்சவள்ளியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சண்டை கைமீறிப் போகவே ஆத்திரத்தில் கணேஷ் பாபு தங்கை என்று கூட பாராமல் அருகில் இருந்த கட்டையால் தங்கையை தாக்கியுள்ளார். அதில் அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கணேஷ் பாபுவை தேடி வருகின்றனர்.