அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்கள்!!aesthetic materials found

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அகழ்வாய்வின் போது சுடுமண் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணியானது இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில், 3500 க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுடுமண் சல்லடை, மூடியுடன் கூடிய சுடுமண் பானை, உருண்டை வடிவிலான அரக்கை பயன்படுத்தும் கற்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மேலும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.