சசிகலா எப்போது வெளியே வருகிறார்.? வழக்கறிஞர் விளக்கம்!

சசிகலா எப்போது வெளியே வருகிறார்.? வழக்கறிஞர் விளக்கம்!



advocate talk about sasikal release

கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 28-ம் தேதி விடுதலையாக இருக்கிறார் என டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நேற்று தனது யூடியூப் சேனலில் பேசியது தற்போது பேசும் பொருளாகி இருக்கிறது. ஏற்கெனவே, “சசிகலா ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலையாவார்” என்று பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் செய்திருந்தார். 

அப்போது, விடுமுறை நாட்கள், நன்னடத்தை விதிகள், தண்டனைக்கு முன்பே ஏற்கெனவே சிறையில் இருந்த நாட்கள் இதையெல்லாம் கணக்கில் கொண்டால் கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலையாகி இருக்க வேண்டும் என்று நமக்குப் பேட்டியளித்திருந்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அதற்கான காரணங்களையும் கூறியிருந்தார்.

sasikala

இந்த நிலையில் தற்போது, ஆகஸ்ட் 28-ம் தேதி சசிகலா விடுதலை நிச்சயம் எனத் தெரிவித்திருக்கும் டெல்லியின் அந்த மூத்த பத்திரிகையாளர் கூறியது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக சிறைத் துறையிடமிருந்து எங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை. 

இந்த வழக்கில் சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகையை எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். ஆனாலும் அதைச் செலுத்திய பிறகுதான் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும். அந்தவகையில் இந்த வழக்கோடு எவ்வித தொடர்பில்லாத நபர்கள் சசிகலா விடுதலை தொடர்பாக அவ்வப்போது எங்களுக்கே தெரியாத தகவல்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அவரது விடுதலைக்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.