தமிழகம்

ஆசையாக ஆர்டர் செய்த சிக்கன் கிரேவி..! உள்ளே கிடந்த கரப்பான் பூச்சி..! கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர்.!

Summary:

advocate complaint on hotel owner

சிக்கன் கிரேவியில் கரப்பான் பூச்சி இருந்ததாக சுட்டிக் காட்டிய வழக்கறிஞரை ஓட்டல் உரிமையாளர் தாக்க முயன்றதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வழக்கறிஞர் ஒருவர் வழக்கு ஒன்றிற்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு அவரது நண்பர்களுடன் வீடு திரும்பினார். அப்போது சமயபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர் ஓட்டல் உரிமையாளரிடம் கரப்பான் பூச்சி இருந்ததை பற்றி கூறியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர் உணவில் பூச்சி இருந்தது பற்றி கூறியதற்காக அவர்களை தாக்க முயன்றதாகவும், அதிகமாக பில் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் இதுகுறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement