ஜல்லிக்கட்டு போட்டியிலும் இப்படி விளம்பரமா.? நொந்துபோன காளையர்களும், மாட்டின் உரிமையாளர்களும்.!

ஜல்லிக்கட்டு போட்டியிலும் இப்படி விளம்பரமா.? நொந்துபோன காளையர்களும், மாட்டின் உரிமையாளர்களும்.!


advertisement-in-jallikattu

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, இந்தவருடம் பொங்கல் பண்டியையொட்டி மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். அதன்படி ஏற்கனவே மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துமுடிந்துவிட்டது.

jallikattu

வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை விழா கமிட்டியினர் மேற்கொண்டாலும் போட்டிகளின் போது காளை உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மிகவும் மனவருத்தம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதற்க்கு முக்கிய காரணம் ஜல்லிக்கட்டு போட்டியில் செய்யப்படும் விளம்பரம் தான். 

தற்போது டிவி, வானொலி, பத்திரிக்கை போன்றவற்றில் விளம்பரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே விளம்பரங்கள் தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னிலை வகிக்கிறது. ஆதிகாலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு போட்டியின்போது விளம்பரப்படுத்துவது வழக்கம். ஆனால் அப்போதைய விளம்பரங்களில் மாட்டின் உரிமையாளரின் பெயரும், மாடு வெற்றிபெற்றதா.? இல்லையா ? என்றும், மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் செய்யப்படும்.

jallikattu

ஆனால் தற்போது, பரிசு கொடுப்பவர்களின் பெயர்களையும், பரிசுகளின் பெயர்களையும் வர்ணனையாளர்கள் கூறி முடிப்பதற்குள் அடுத்தமாடு தயாராகி விடுகிறது. பல மாவட்டங்களை கடந்து மாடு கொண்டுவரும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தனது மாட்டின் பெயரை கூட விளம்பரப்படுத்தவில்லையே என குமுறுகின்றனர். அதேபோல் மாடு வெற்றிபெற்றதா? இல்லையா? என்ற அறிவிப்பின் போது கூட பரிசு பொருட்களின் விளம்பரம் மட்டுமே கேட்பதால் பார்வையாளர்களும் வெறுப்படைகின்றனர்.